நவம்பர்-17 – இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு வீட்டைக் குறி வைத்து 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
Caesarea இல்லத்தில் உள்ள தோட்டத்தில் அவ்விரு குண்டுகளும் வந்து விழுந்ததை, போலீஸ் உறுதிப்படுத்தியது.
எனினும் அப்போது நெத்தன்யாஹுவோ அவரின் குடும்பத்தினரோ வீட்டில் இல்லை.
அத்தாக்குதலைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறியப் பாதுகாப்புப் படை, உடனடி விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.
நெத்தன்யாஹு வீட்டைக் குறி வைத்து அண்மையக் காலத்தில் நடத்தப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
அக்டோபரில், ஈரான் ஆதரவிலான ஹிஸ்புல்லா இராணுவம் அனுப்பியதாகக் கூறப்பட்ட டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
அது தம்மையும் தனது மனைவியையும் கொல்ல ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் முயற்சி எனக் குற்றம் சாட்டியிருந்த நெத்தன்யாஹு, ஈரானின் பினாமிகளை எதிர்த்து தொடர்ந்து போர் புரியப் போவதாக சூளுரைத்தார்.