கோலாலம்பூர், நவ 18 – நாம் இப்போது சீனாவின் ஒரு பகுதியாக ஆகிவிட்டோமா என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வினவியுள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்புடன் மலாய் மொழியில் இல்லாமல் விளப்பரப் பலகைகள் இப்போது சீன மொழியில் வைக்கப்படுவதற்கு அனுமதித்துள்ள அரசாங்கத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்
கடந்த வாரம் கோலாலம்பூரில் புதிய வர்த்தக வளாகத்திற்கு வருகை புரிந்தபோது பல்வேறு கடைகளில் இத்தகையை விளம்பரங்களை பார்த்ததால் தாம் திடீரென சீனாவில் இருந்ததைப்போல் உணர்ந்ததாக மகாதீர் கூறினார். விளம்பரப் பலகைகளில் சீன மொழிகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு குறைவான அளவிலேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.