கோலாலம்பூர், நவம்பர்-21 – கிழக்குக் கரை மாநிலங்களான பஹாங், திரங்கானு மற்றும் கிளந்தானில் வரும் சனிக்கிழமை வரை அடைமழைத் தொடருமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia தெரிவித்துள்ளது.
கிளந்தானில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசீர் பூத்தே, குவாலா கிராய் ஆகிய இடங்களில் கனமழைப் பெய்யும்.
பஹாங்கில் ஜெராண்டூட், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய இடங்கள் பாதிக்கப்படும்.
இவ்வேளையில் நவம்பர் 23 வரை எச்சரிக்கை அளவிலான அடைமழை, கிளந்தான், பஹாங் மற்றும் ஜோகூரின் மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய இடங்களில் பெய்யுமென MET Malaysia கூறியது.
கிளந்தானில் குவா மூசாங், பஹாங்கில் கேமரன் மலை, லிப்பிஸ், ரவூப், பெந்தோங், தெமர்லோ, மாரான், பெரா ஆகிய இடங்களில் அந்நிலைக் காணப்படும்.
வானிலை குறித்த ஆகக் கடைசி தகவல்களை MET Malaysia-வின் இணைய அகப்பக்கம், சமூக ஊடகப் பக்கங்கள், மற்றும் அதன் myCuaca செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.