ஈப்போ ஜாலான் பென்டாஹாராவில் இன்று காலையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் 3 கிலோ நகைகளை கொள்ளையிட்டு தப்பியோடினர் .
நகைகளை உருக்கும் மையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
கத்தி மற்றும் பாராங்குடன் நகைகளை கொள்ளையிட்ட பின் அறுவர் என நப்பப்படும் அந்த சந்தேகப் பேர்வழிகள் இரண்டு கார்களில் தப்பிச் சென்றனர். வெள்ளை மற்றும் பொன்நிறத்திலான காரில் அந்த கொள்ளையர்கள் வந்ததாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதோடு அந்த கொள்ளையர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக Abang Zainal கூறினார். அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் வாடிக்கையாளருக்கு தங்க நகைகளை விநியோகிக்கச் சென்றபோது அந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது.