பெசுட், டிச 5 – பெசூட் Kampung Kubang Ikan னில் நேற்று மதியம் 2 மணியளவில் 120 கிலோ (கிலோ) எடையுள்ள சூரிய கரடி பிடிபட்டது. இந்த விலங்கு முன்பு Kampung Gong Badang வட்டராத்தில் விடியற்காலையில் சுற்றித் திரிந்ததை காண முடிந்ததாக திரெங்கானு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் இயக்குநர் Loo Kean Seong தெரிவித்தார்.
கிராமவாசிகள் வழங்கிய தகவல் மற்றும் Besut Perhilitan உறுப்பினர்களின் கண்காணிப்பின் விளைவாக, அந்தக் கரடி பின்னர் Kampung Kubang Ikan னில் காணப்பட்டது.
பிடிபட்ட அந்த ஆண் கரடி கூண்டில் அடைக்கப்பட்டு பின்னர் இயற்கையான வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக Loo கூறினார். அந்த விலங்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது, இதனிடையே காலை 9 மணியளவில் செம்பனை தோட்த்திற்கு வேலைக்கு சென்றபோது அந்த கரடியை நெல் வயல் பகுதியில் கண்டதாக Kampung Kubang Ikanனை சேர்ந்த குடியிருப்பு வாசியான முகமட் அமிமுட்மின் ( Muhammad Amimutmin ) கூறினார்.