கோலாலம்பூர், டிச 5 – Tik Tok காணொளி மூலம் நாடாளுமன்ற சபாநாயகர்
ஜொஹாரி அப்துலை சிறுமைப்படுத்தியதோடு அவரிடம் மன்னிப்பு கேட்கத்
தவறிய பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹசிம் (Awang Hashim ) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதிலிருந்து 10 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். தம்மையும் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர்
வான் அகமட் பெசாலையும் சமூக வலைத்தளத்ததில் சிறுமைப்படுத்தி ஜூலை 18ஆம் தேதி அவாங் ஹசிம் அறிக்கை வெளியிட்டதாக ஜொஹாரி கூறினார்.
பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவாங் ஜூலை 22 ஆம் தேதியன்று கடிதம் அனுப்பிய போதிலும் மன்னிப்பு கேட்கவில்லை, மேலும் அவாங்கிற்கு ஆலோசனை வழங்குமாறு நாடாளுமன்றத்தின் செயலாளர் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் தலைமை கொறடா தகியுடின் ஹசானும் (Takiyuddin Hassan ) கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
நவம்பர் 6ஆம்தேதி அவாங் குற்றம் புரிந்தபோதிலும் அவரிடமிருந்து மன்னிப்பு இன்னும் கிக்கவில்லையென ஜொஹாரி தெரிவித்தார். பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை மற்றும் செயல் நடவடிக்கை மக்களவை சபாநாயகரை அவமதித்துள்ளன. டிக்டோக் குறித்த அறிக்கை கடுமையான குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உரிமைகள் மற்றும் சலுகைகளை மீறுவதாகும் என்பதையும் ஜொஹாரி சுட்டிக்காட்டியிருந்தார். எனவே கூட்ட ஒழுங்குமுறை 44 (2) விதியின் கீழ் 10 நாட்களுக்கு அவையில் கலந்துகொள்வதிலிருந்து தற்காலிக தடையில் இருக்கும்படி தாம் அவாங் ஹசானுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜொஹாரி தெரிவித்தார்.