
ஈப்போ, டிசம்பர்-6 – ஈப்போ, அரேனா கெப்பாயாங் புத்ராவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் DAP தோள் கொடுத்து நிற்கிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் கெப்பாயாங் DAP சேவை மையமும் DAP நடவடிக்கைப் பிரிவும் களத்திலிறங்கி பல்வேறு பணிகளை மும்முரமாக மேற்கொண்டுள்ளன.
பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்ற உதவியது, இலவசமாக கனிம நீர் புட்டிகளை விநியோகித்ததும் அவற்றிலடங்கும்.
தவிர, வெள்ளம் வற்றிய கையோடு ஈப்போ மாநகர மன்றம், தீயணைப்பு-மீட்புத் துறை, அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கி 350-க்கும் மேற்பட்டோரை களத்திலிறக்கி துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் 285 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 255,000 ரிங்கிட் வெள்ள நிவாரண நிதியும் பட்டுவாடா செய்யப்பட்டது.
வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் வாயிலாக மத்திய அரசு 108 மில்லியன் ரிங்கிட் செலவில் அப்பகுதிக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்களையும் உடனடியாக டெண்டர் விட்டுள்ளது.
பந்தாய் மருத்துவமனை மற்றும் பேராக் தளவாட சங்கத்தின் ஒத்துழைப்போடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 200 மெத்தைகளும் வழங்கப்பட்டன.
மலேசியா மடானி சிந்தாந்தத்திற்கு ஏற்ப, இதுபோன்ற கஷ்ட காலங்களில் குழுவாக ஒன்றிணைந்து பரிவோடு சேவையாற்றும் பணி தொடரும் என
என கெப்பாயாங் DAP கூறியது.