கோலாலம்பூர், டிசம்பர் 6 – ஆஸ்டிரோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டப் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டி ஆட்டம் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஒளிபரப்புக் காணவிருக்கிறது.
புதுப்பிக்கப்பட்டத் தோற்றத்துடன் மீண்டும் ஆட்டம் நிகழ்ச்சி, பிரபலமான முகங்களாகவும், குறிப்பிடத்தக்கத் தொகுப்பாளர் ஜோடியாகவும் திகழும் டெனெஸ் குமார் மற்றும் விகடகவி மகேன் ஆகியோரை 13 வருட இடைவெளிக்குப் பிறகு இணைக்கிறது.
மீண்டும் ஆர்வமுள்ள உள்ளூர் நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சியடைவதாக ஆஸ்டோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறினார்.
உள்ளூர் கலைத்துறையில் 35 ஆண்டுகளாகப் பல பாத்திரங்களை வகித்தப் புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே.நாடவும், தொகுப்பாளர், நடனக் கலைஞர், மற்றும் உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டுமல்லாது ஆட்டம் 100 வாகையில் தொகுப்பாளருமான, நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக மூன்று தசாப்தங்களுக்கு மேலானக் கலைத்துறையில் அனுபவம் உள்ளவர் மற்றும் ஆட்டம் 100 வாகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வராவும் நடுவராகக் கைகோர்க்கவுள்ளனர்.
மொத்தம் 22 அணிகள் ஆட்டம் நிகழ்ச்சியில் களம் இறங்கவுள்ளனர்.
ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவர்:
- முதலாம் பரிசு: RM 50,000.00
- இரண்டாம் பரிசு: RM 25,000.00
- 2 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா RM5,000.00
- இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள்: ஒவ்வொரு குழுவுக்கும் தலா RM 2,000.00
ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.
மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் ஆஸ்ட்ரோ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.