
கோலாலம்பூர், டிசம்பர்-8 – தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் மீது வங்காளதேச ஆடவன் எச்சில் துப்பியதாக வைரலான செய்தி குறித்து போலீசுக்கு புகாரேதும் வரவில்லை.
பரிசோதித்து பார்த்ததில் சம்பவம் நடந்த இடமும் உறுதியாகத் தெரியவில்லையென, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) கூறினார்.
எனினும் அவ்வீடியோவில் இருப்பதாகக் கூறப்படும் வங்காளதேசி சீனாவில் படிக்கும் மாணவர் என ஒரு கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட ஆடவன், மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் ‘மினி டாக்கா’ அதாவது வங்காளதேச தலைநகர் டாக்காவைப் போல் இருப்பதாக சிறுமைப்படுத்தி பேசியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
அச்செயல் மலேசியர்களை சினமூட்டும் நடவடிக்கை என்றும், அவன் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்றும் பரவலாகக் கோரிக்கை எழுந்தது.
அமுலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் அதிருப்தியடைந்து அது போன்ற சினமூட்டும் செயல்களில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பேசிச்கொண்டனர்.