கோலாலம்பூர், டிசம்பர் 8 – இந்திய வணிகர்களுக்கே தனித்துவம் அளிக்கும் வகையில், நாட்டில் முதல் முறையாக இந்திய உணவு வணிகர்களை ஒன்றிணைக்கும் ‘விருந்து at KL Town’ எனும் உணவக மையம் திறக்கப்பட்டிருக்கிறது.
சீன மற்றும் மலாய் உணவுகள் அதிகளவு விற்கப்படும் food court-களுக்கு மத்தியில், இந்திய வணிகர்களால் பாரம்பரிய இந்திய உணவுகளுடன் மேற்கத்திய உணவுகளையும் விற்கும் வகையில் இந்த ‘விருந்து at KL Town’ food court அறிமுகமாகியுள்ளது.
இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் வணிக முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக உருவாக்கம் கண்ட இந்த food court வரவேற்கத்தக்கது என இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த தொழில்முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணனின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கூறினார்.
இந்திய உணவக வணிகர்களுக்கு வணிகம் மேற்கொள்வதற்கான ஊக்கத்தையும் ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த food court முறையிலான உணவகத்தைத் துவக்கியதாக அதன் தோற்றுநர்கள் தெரிவித்தனர்.
கோலாலம்பூர், Maluri-யில், MyTown Shopping Center எதிர்புறத்தில் அமைந்துள்ள இந்த food court-யின் தொடக்கவிழாவில் பொது மக்களுக்கு இலவச பிரியாணி வழங்கப்பட்டு, மக்களின் பாராட்டுகளைப் பெற்றது.
26 வணிகர்களை ஒரே கூரையின் கீழ் கொண்ட இந்த food court, Jalan Nakhoda Yusof, Maluri-யில் மாலை 4 மணி தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.