Latestமலேசியா

காற்று குறுக்கே வீசிய போது ‘நண்டு’ முறையில் விமானத்தைத் தரையிறக்கிய மலேசிய விமானிக்கு உலகளவில் குவியும் பாராட்டுகள்

கோலாலம்பூர், டிசம்பர்-10, பலத்த காற்று மற்றும் புயலுக்கு மத்தியில் Airbus A350-900 விமானம் லண்டன், ஹீத்ரோவ் (Heathrow) அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய சம்பவம், Malaysia Airlines (MAS) விமானியின் பெயரை உலகளவில் பேச வைத்துள்ளது.

பெரும் சவால் மிக்க அந்த வானிலையின் போது நிலைக்குலையாமல் அந்த ஜம்போ விமானத்தை சமச்சீராக வைத்து crabbing அல்லது ‘நண்டு’ முறையில் MAS விமானி பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

Crabbing என்பது, காற்று குறுக்கே வீசும் போது, அதனை நேரடியாக எதிர்கொண்டு முன்னோக்கிப் பறந்து, நண்டு போல கிட்டத்தட்ட பக்கவாட்டாக தரையிறங்கும் முறையாகும்.

இது, காற்றின் சக்தியை எதிர்கொண்டு ஓடுபாதைக்கு ஏற்றவாறு விமானம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

பெயர் குறிப்பிடப்படாத மலேசிய விமானியின் திறமையை வெளிக்காட்டும் அதன் வீடியோ உலகளவில் வைரலாகி, சமூக ஊடகங்களில் அவரின் சாதுரியம் பாராட்டப்பட்டு வருகிறது.

“மிகச் சிறந்த கேப்டன் அவர். விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதற்காக அவரை தலை வணங்குகிறாம்” என வலைத்தளவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

MAS விமானிகள் பாராட்டுகளைப் பெறுவது இது முதல் முறையல்ல.

மோசமான வானிலையின் போது குறிப்பாக குறுக்குக் காற்று வீசும் போது பெரிய விமானங்களை திறமையாகக் கையாண்ட பல MAS விமானிகளின் விடியோக்கள் ஏற்கனவே வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!