மலாக்கா, டிசம்பர் 11 – உணவகங்களில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளைத் திருடி வந்த தம்பதியரை, போலீசார் டிசம்பர் 4 அன்று கிளேபாங் (Klebang), மலாக்காவில் கைது செய்தனர்.
33 வயது ஆண் மற்றும் 35 வயது பெண் கொண்ட இந்த தம்பதியர், மதரஸா (madrasahs) மற்றும் குழந்தைகள் இல்லங்களின் பெயரில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளைத் திருடி வந்திருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக மலாக்கா மற்றும் ஜோகூர் உணவகப் பகுதிகளில் செயல்பட்டு, தினசரி சுமார் RM250 ரிங்கிட் வரை வருமான ஈட்டியதாகத் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, 54 நன்கொடை பெட்டிகள், ஒரு கார், உலோக வெட்டும் கருவி மற்றும் 8 கிராம் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் மொத்தம் எட்டு விசாரணைப் பதிவுகள் திறக்கப்பட்ட நிலையில், 7 நாட்களுக்கு அந்த தம்பதியர் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.