Latestஉலகம்

ஜோர்ஜியா நாட்டில் துயரம்; உணவகத்தில் விஷ வாயு கசிந்து 11 இந்தியத் தொழிலாளர்கள் பலி

திபிலிசி, டிசம்பர்-17 – கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசியாவுக்கு குறுக்கே உள்ள ஜோர்ஜியா (Georgia) நாட்டின் இந்திய உணவகமொன்றில், carbon monoxide விஷ வாயு கசிந்து 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குடாவரி (Gudauri) மலைப்பகுதியில் உள்ள உல்லாசத் தலத்தில் வெள்ளிக்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

11 பேரும் அவ்வுணவகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஆவர்.

உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அச்சம்பவம் சதிநாச வேலையாக இருக்கலாமென்ற சாத்தியத்தை மறுத்துள்ளனர்.

மாறாக கவனக்குறைவால் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டுச் செல்ல தூதரக அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!