Latestமலேசியா

ஸ்கூடாயில் குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதா? உணவகம் மீது விசாரணை

ஜோகூர் பாரு, டிசம்பர்-17 – ஜோகூர் ஸ்கூடாயில், வாடிக்கையாளர்களுக்குச் சமைப்பதற்காக, உணவகப் பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட காய்கறிகளைச் சேகரிப்பதாகக் கூறி, வீடியோ ஒன்று டிக் டோக்கில் வைரலாகியுள்ளது.

உணவகப் பணியாளர்கள் என நம்பப்படும் சில பெண்கள் குப்பைத் தொட்டிகளிலிருந்து பொருட்களை எடுப்பது அந்த 31 வினாடி வீடியோவில் தெரிகிறது.

அதிலிருக்கும் ஓர் ஆடவர், சேகரிக்கப்பட்ட காய்றிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சமைப்பதற்காக எனக் கூறுவதும் கேட்கிறது.

இதனால் அதிருப்தியடைந்த ஒரு மாது, அந்தக் காய்கறிகள் தங்களின் சொந்த உபயோகத்துக்குத் தான் என்கிறார்.

வீடியோ வைரலானதை அடுத்து, உணவகத்தின் உரிமையாளர் டிக் டோக் வாயிலாக அக்குற்றச்சாட்டை மறுத்தார்.

வியாபாரத்தைக் கெடுக்க பொறுப்பற்றத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சியே அதுவென்றார் அவர்.

இந்நிலையில், அவ்வுணவகம் நேற்று மூடப்பட்டது; இன்று மாநில சுகாதார அதிகாரிகள் அங்கு சோதனைக்குச் செல்வர் என, சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!