Latestமலேசியா

OP Pedo ஒருங்கிணைந்த ஆறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை ; 13 பேர் கைது

கோலாலம்பூர், டிச 24 – பாலியல் ரீதியில் சிறார்களை துன்புறுத்துவதற்கு பயன்படுத்துவதற்கான அம்சங்களைக் கொண்ட பதிவுகள் மற்றும் இதர உள்ளடக்கங்களை இணையத்தில் வைத்திருந்தது மற்றும் அதனை விநியோகித்ததில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்போடு நேற்றிரவு போலீஸ் மேற்கொண்ட OP Pedo ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமூக ஊடகத் தளங்கள் மூலம் இணையத்தை தொடர்புப்படுத்தி சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் ஈடுபடுவோரை கண்டறியும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஷாருடின் உசேய்ன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் சிறார்களின் பாதுகாப்பில் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புக்கிட் அமானின் பாலியல், பெண்கள் மற்றும் சிறார்கள் விசாரணைப் பிரிவு கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், திரெங்கானு, பினாங்கு மற்றும் பேரா ஆகிய ஆறு மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த சோதனையின்போது , வசதியான , நடுத்தர மற்றும் குறைந்த விலை வீடமைப்பு பகுதிகளில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கணினிகள், செல்போன்கள் மற்றும் வெளிப்புற ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இருந்து 40,000 CSAM மற்றும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் உள்ளடக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ரசாருடின் உசேய்ன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 9 மணியளவில் அதிகாரிகள் 20 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 மற்றும் 74 வயதுக்குட்பட்ட சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் ரீதியில் சிறார்களை துன்புறுத்தப்படும் பல்வேறு பதிவுகளை வைத்திருந்ததில் தங்களது குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டது குறித்து பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் பதிவுகள் வைத்திருந்தது தொடர்பான சட்டத்தின் கீழ் 13 விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குறிப்பாக பதின்ம வயதினர் மற்றும் சிறார்கள் தங்களை சுயக்கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு தேவையற்ற குற்றச்செயல்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கும்படி போலீஸ் படைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சிறார் பாலியல் தொடர்பான பதிவுகளை சமூக ஊடகங்களில் அகற்றுவதில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் தொடர்ந்து கடுமையாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!