தங்காக் ,டிச 27 – LED விளக்கு விழாவில் சீனக் கொடியுடன் ராக்கேட் வடிவத்தைக் கொண்ட காட்சியமைப்பை உடனடியாக நிறுத்தும்படி தங்காக் (Tangkak ) மாவட்ட மன்றம் உத்தரவிட்டது.
Bukit Gambir பலநோக்கு மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவை நிறுத்தும்படி உடனடியாக கேட்டுக்கொள்ளும் நோட்டிஸ் வழங்கப்பட்டதாக தங்காக் மாவட்ட மன்றம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சீன கொடியுடன் கொண்ட அந்த ராக்கேட் அமைப்பின் வடிவத்தை ஊராட்சி மன்ற ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டனர்.
மின்விளக்கு விழா கண்காட்சியின்போது சீன கொடியுடன் கொண்ட ராக்கேட் வடிவத்தை ஏற்பாட்டாளர்கள் நிறுத்திவைத்திருந்தது குறித்து தங்காக் மாவட்ட மன்றம் புகாரைப் பெற்றிருந்தது.
அவர்களது அந்த நடவடிக்கை உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததோடு அவர்களது உணர்வுகளை மதிக்காமல் மற்றும் விழாவின் நிபந்தனையை பின்பற்றாமல் ஏற்பாட்டாளர்கள் செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த கண்காட்சி முழுமையாக மூடப்பட்டதோடு அது தொடர்பான எந்த நடவடிக்கையும் தற்போது நடைபெறவில்லையென நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட காண்காணிப்பில் தெரியவந்ததாக தங்காக் மாவட்ட மன்றம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அந்த ராக்கேட்டில் சீனக் கொடி இடம்பெற்றது தொர்பாக இரண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ரோஸ்லான் முகமட் தாலிப் (Roslan Mohd Talib ) தெரிவித்தார்.