கோத்தா பாரு, டிசம்பர்-29 – கிளந்தான், பாச்சோக்கில் 10 வயது சிறுமியைக் கற்பழித்ததாக, இரு இராணுவ வீரர்கள் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு ஏப்ரல் வாக்கில் பட்டப் பகலில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, 39 வயது Mahadi Ismail, 20 வயது Aizat Hakim Mohammad இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும், இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
இருவரையும் தலா 10,000 ரிங்கிட் உத்தரவாதத்தில் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
அடுத்தாண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.