பெர்லின், டிசம்பர்-30, கிழக்கு ஜெர்மனி நகரான Waldheim-மில் பேரங்காடியொன்றில் திடிரென ஏற்பட்ட மர்ம வாயு கசிவால், குறைந்தது 41 பேர் சுவாசப் பிரச்னைக்கு ஆளாகினர்.
கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பல வாடிக்கையாளர்களுக்கு மூச்சுத் திணறிய வேளை, பலருக்கு தலை சுற்றியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
அவர்களில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
பாதுகாப்புக் கருதி
சற்று நேரத்தில் பேரங்காடி மூடப்பட்டது.
மர்ம வாயு கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.