புத்ராஜெயா, ஜனவரி-6 – JPJ சம்மன்களை 150 ரிங்கிட் கழிவுச் சலுகை விலையில் செலுத்த, வாகனமோட்டிகளுக்கு 6 மாத கால சிறப்பு அவகாசம் வழங்கப்படுகிறது.
நாளை ஜனவரி 3 முதல் ஜூன் 30 வரை அச்சலுகை வழங்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
வழக்கமாக 300 ரிங்கிட் அபராதத் தொகையை உட்படுத்தும் 3 போக்குவரத்துக் குற்றங்களை, இந்த விலைக் கழிவுச் சலுகை உள்ளடக்கும்.
வேக வரம்பை மீறுதல், சாலை சமிக்ஞை விளக்கைப் பின்பற்றாதது மற்றும் saman tampal ஆகியவையே அம்மூன்று சம்மன் பிரிவுகளாகும்.
நிலுவையில் உள்ள அபராதங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், சாலை வரியையும் வாகனமோட்டும் உரிமத்தையும் அவர்களால் புதுப்பிக்க முடியாது என அந்தோனி லோக் நினைவுறுத்தினார்.
எனவே, இந்த பாதி விலைச் சலுகையானது, வாகனமோட்டிகள் அபராத பாக்கியைச் செலுத்துவதற்கான அரிய வாய்ப்பாகும் என்றார் அவர்.
JPJ முகப்பிடங்கள், JPJ kiosk இயந்திரங்கள், மற்றும் myJPJ செயலி ஆகியவற்றில் தான் இந்த அபராதங்களைச் செலுத்த முடியும்.
MyEG அல்லது Pos Malaysia வாயிலாக செலுத்த முடியாது என அமைச்சர் நினைவுறுத்தினார்.
நடப்பில் 2 மில்லியன் சம்மன்கள் நிலுவையில் உள்ளன; அவற்றில் 2018 செப்டம்பர் தேதியிடப்பட்டதும் உண்டு;
சம்மன்கள் நிலுவையிலிருப்பதால் தாங்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதை ஏராளமான வாகனமோட்டிகள் உணராமலிருப்பதாக அந்தோனி லோக் சொன்னார்.