
ஷா ஆலாம், ஜனவரி-6, புதன்கிழமையன்று கிள்ளான், பண்டாமாரானில் பேரங்காடியில் கைப்பையைத் திருடி வைரலான பெண் கைதாகியுள்ளார்.
கைப்பைத் திருடுபோனதில் தனிப்பட்ட ஆவணங்கள், ஒரு tablet , ஒரு கைப்பேசி, ரொக்கப் பணம் என சுமார் 3,000 ரிங்கிட்டும் மேல் தமக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 39 வயது மாது முன்னதாக போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், மறுநாள் அதிகாலை 1 மணிக்கு பண்டார் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு வீட்டில் 37 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தனர்.
திருடப்பட்ட கைப்பையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை அறிக்கை முழுமைப் பெற்று, சந்தேக நபர் கிள்ளான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பவிருப்பதை தென் கிள்ளான் போலீஸ் தலைவர் Cha Hoong Fong உறுதிப்படுத்தினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்ட பெண் பேரங்காடியில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், பக்கத்தில் தள்ளுவண்டியில் அவர் வைத்திருந்த கைப்பையை அடையாளம் தெரியாத பெண்ணொருவர் திருடிச் செல்லும் காட்சி CCTV கேமராவில் பதிவாகி முன்னதாக வைரலானது.