ஈப்போ, ஜனவரி-8 – ஈப்போ, பெர்ச்சாமில் 77 வயது முதியவர் ஓட்டியக் கார் சாலை வேகத் தடையை மோதி கட்டுப்பாட்டை இழந்து, எண்ணெய் நிலையமொன்றின் பல்பொருள் விற்பனைக் கடையை மோதி நின்றது.
நேற்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் கடையின் கண்ணாடி உடைந்து, மற்ற பொருட்களும் சேதமுற்றன.
எனினும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என, ஈப்போ போலீஸ் தலைவர் துணை ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் (Abang Zainal Abidin Abang Ahmad) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது எண்ணெய் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் எவரும் இல்லை.
வேகத்தடையை மோதியதும் முதியவர் பதற்றத்தில் எண்ணெயை வேகமாக அழுத்தியதே அச்சம்பவத்திற்குக் காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் பேரில் அம்முதியவர் விசாரிக்கப்படுகிறார்.