![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-10-Jan-2025-05-17-PM-1226.jpg)
கோலாகெடா, ஜன 10 – கோலா கெடா , கம்போங் செமாடாங் பினாங்கில் சட்டவிரோதமாக டீசல் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஐவர் , நேற்று லங்காவி வட்டார மெரின் போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை இரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக லங்காவி மெரின் போலீஸ் தலைமையகத்தின் உதவி கண்காணிப்பாளர் முகமட் ருட்சுவான் அகமட் ( Mohd Rudzuan Ahmad ) தெரிவித்தார். அவர்கைளில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவன் உட்பட ஐவர் அனுமதி அல்லது அங்கீகார ஆவணங்கள் எதுவுமின்றி ஒரு மீன்பிடி படகிலிருந்து மற்றொரு படகிற்கு டீசல் எண்ணெயை பரிமாற்றும் செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்தபோது Ops Taring Landai நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்படும் டீசல் எண்ணெயை நடுக்கடல் பகுதிக்கு எத்துச் சென்று தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக நம்பப்படுகிறது. அவர்களிடமிருந்து கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய 855,300 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 33 மற்றும் 68 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர்களில் நால்வர் உள்நாட்டையும் மற்றொருவர் தாய்லாந்தை சேர்ந்தர்கள் என Mohamad Rudzuan தெரிவித்தனர்.