
கோலாலம்பூர், ஜனவரி-13, நேற்று தொடங்கிய PLKN 3.0 எனப்படும் தேசிய சேவைப் பயிற்சித் திட்ட அமுலாக்கத்திற்கு அரசாங்கம் முழு தயார் நிலையில் உள்ளது.
பங்கேற்பாளர்களின் தங்குமிட வசதி, ஆரோக்கியம், உணவு உள்ளிட்டவை அதிலடங்குமென தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் கூறினார்.
நேற்று தொடங்கியது சோதனை முறையிலான பயிற்சியாகும்; இவ்வாண்டு அது போல் மேலும் 3 பயிற்சிகள் இருப்பதாக நேற்று பங்கேற்பாளர்களை நேரில் சந்தித்த போது அமைச்சர் சொன்னார்.
தன்னார்வ முறையில் அப்பயிற்சியில் பங்கேற்றதற்காக அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
மலேசிய இளைஞர்களிடையே தேசபக்தி, தேசிய ஒற்றுமை மற்றும் பண்பைக் கட்டியெழுப்புவதையும், உடல் மற்றும் மனப் பயிற்சியின் மூலம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறனை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த பயிற்சி முகாமில், மொத்தம் 120 பயிற்சியாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
கோலாலம்பூரில், அஸ்கார் வாத்தானியா 515-வது பட்டாளத்தின் இராணுவ முகாமில், பிப்ரவரி 25 வரை 45 நாட்களுக்கு அவர்கள் பயிற்சியை மேற்கொள்வர்.