Latestமலேசியா

மலேசியாவின் உயர்வு தெளிவுத்திறன் கொண்ட உஸ்மாசெட் 1 செயற்கைகோள் ஏவப்பட்டது

கோலாலம்பூர், ஜன 15 – உள்நாட்டு நிறுவனமான உஸ்மா பெர்ஹாட் (Uzma Berhad) தயாரித்த உயர் தெளிவுத்திறன் கொண்ட ரிமோட் சென்சிங் (remote sensing) செயற்கைக்கோளான உஸ்மாசாட்-1 (UzmaSAT-) இன்று அதிகாலை குறைந்த புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஸ்பேஸ்எக்ஸின் ( SpaceX ) ஃபால்கன் 9 (Falcon 9) டிரான்ஸ்போர்ட்டர் 12 (Transporter 12 ) ராக்கெட்டைப் பயன்படுத்தி மலேசிய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் (California ) உள்ள வாண்டன்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் பேஸிலிருந்து (Vandenberg Space Force Base) அந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மலேசியா கண்காணிப்பின் கீழ் 13 வது செயற்கைக்கோள் UzmaSAT-1 ஆகும் என அறிவியல் ,தொழிற்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தேசிய விண்வெளிக் கொள்கை 2030 இன் தலைவராக, இருந்துவரும் அறிவியல் தொழிற்நுட்ப புத்தாக்க அமைச்சு மலேசிய விண்வெளி நிறுவனத்தின் மூலம் நிலையான விண்வெளித் துறையின் வளர்ச்சியில் உள்ளூர் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!