
கிள்ளான், ஜனவரி-21, கிள்ளான், சுங்கை காப்பார் இண்டா தொழிற்பேட்டையில் உள்ள இரசாயனத் தொழிற்சாலை நேற்று தீப்பிடித்து சில வெடிப்புகளும் ஏற்பட்டன.
நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் அது குறித்து தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கி லாரியும் வெடிப்பில் சேதமுற்றது.
எனினும் அச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எரிவாயு கசிவுக் காரணமாக தீ ஏற்பட்டதாக நம்பப்பட்டாலும், விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு வெடிப்பு ஏற்படக் காரணமான இரசாயனத்தைத் கண்டறியும் பணிகளில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.