
கோலாலம்பூர், ஜன 24 – மலாயா பல்கலைக்கழகத்திலுள்ள KK Mart கடையில் சிவப்பு வர்ணம் கொட்டியதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். சம்வம் நடைபெற்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் இது தெரியவந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தே ருஸ்டி முகமட் இசா ( Rusdi Mohd Isa ) தெரிவித்தார். ஜனவரி 10ஆம் தேதி முதல் அக்கடை திறக்கப்படவில்லை என்பதோடு கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அருகேயுள்ளள கடையின் ஊழியர் சத்தம் கேட்டு உணர்ந்தபோதுதான் கே.கே மார்ட் கடையில் வர்ணம் கொட்டப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு ஆடவர்கள் மோட்டார்சைக்கிளில் அக்கடைக்கு வந்துள்ளதால் மேல் நடவடிக்கைக்காக அவர்களை கண்டறியும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தண்டனைச் சட்டத்தின் 427 ஆவது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இது தொடர்பான தகவல் அறிந்தவர்கள் போலீசுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.