Latestமலேசியா

சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூட்டரசு சாலைகளில் வேகக் கட்டுப்பாடு ஒரு மணிக்கு 80 கிலோமீட்டராக குறைப்பு

கோலாலம்பூர், ஜன 27 – சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாளை ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம்தேதிவரை நாடு முழுவதிலும் ஒரு மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகமாக இருந்த கூட்டரசு சாலைகளுக்கான வேகக் கட்டுப்பாடு அளவு ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டராக தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணி அமைச்சர் Alexander Nanta Linggi வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்திருக்கிறார்.

அதோடு முக்கியமற்ற சாலை நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளும் போக்குவரத்திற்கு தடையின்றி தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கிறது. சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பிற்காக அவசர வேலைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதோடு சாலையை பயன்படுத்துவோர் திட்டமிட்டபடி தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

தேவையேற்பட்டால் பயணர்கள் தங்களது இடங்களை சுமுகமாக சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அலெக்ஸன்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!