
பெய்ஜிங், ஜனவரி-28 – செம்மறி ஆட்டு அம்மை மற்றும் ஆட்டு அம்மை நோய்ப் பரவல் காரணமாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளிலிருந்து பண்ணை விலங்கு இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது.
செம்மறி ஆடுகள், கோழி மற்றும் பிற விலங்குகளும் அவற்றிலடங்கும்.
பண்ணை விலங்குகளை உட்படுத்தி பல நாடுகளில் இந்நோய் பரவுவதாக WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சிகளுக்கும் இத்தடை பொருந்தும்.
சீனா விதிக்கும் தடையால் பாதிக்கப்படும் நாடுகளில், கானா, சோமாலியா, கட்டார், கோங்கோ, நைஜீரியா, தான்சானியா, எகிப்து, பல்கேரியா, கிழக்கு தீமோர் உள்ளிட்டவையும் அடங்கும்.
செம்மறி ஆட்டு அம்மை, ஆட்டு அம்மை பரவலால், பாலஸ்தீனம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேப்பாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்தும் செம்மறி ஆடுகள், மற்றும் ஆட்டிறைச்சி சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு பெய்ஜிங் தடை விதித்துள்ளது.
அதே காரணங்களுக்காக ஜெர்மனியிலிருந்தும் மேற்கண்ட இறைச்சிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, உலகின் மிகப்பெரிய இறைச்சி இறக்குமதியாளர் என்பதால், இத்தடை உலகளவில் இறைச்சித் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.