ஆஸ்திரேலியக் காட்டுத் தீயில் சிங்கப்பூரின் பரப்பளவுக்கு நிகரான நிலம் சாம்பளானது

சிட்னி, ஜனவரி-28 – தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில், இதுவரை 65,000 ஹெக்டர் நிலப்பரப்பு அழிந்துள்ளது.
அது சிங்கப்பூரின் மொத்த பரப்பளவுக்குச் சமமானதாகும்.
விக்டோரியா மாநிலத்தில் தேசியப் பூங்காவில் தொடங்கிய அக்காட்டுத் தீ, தற்போது மெல்பர்னுக்கு தென்மேற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் சிறிய விவசாயப் பட்டணமான Dimboola-வை நோக்கி நகருகிறது.
Dimboola-வில் இதுவரை சுமார் 100 பேர் நிவாரண மையத்தில் பதிந்துகொண்டுள்ளனர்.
தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வரும் தீயணைப்பு வீரர்கள், இன்னும் வெளியேறாமலிருப்போருக்கு காலம் கடந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இனியும் வீடுகளிலிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது ஆபத்து என்பதால், வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்து நிலவரங்களைக் கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீறி வெளியேறினால் நிலைமை கை மீறி போய் விடுமென எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை கடுமையான இயற்கை பேரழிவுகளுக்குத் தூண்டுதலாக இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன் 2019-2020 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில், மில்லியன் கணக்கான விலங்குகள் மடிந்து, பூர்வீக காடுகள் அழிந்து, முக்கிய நகரங்களை அடர்ந்த புகை சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.