Latestமலேசியா

முஸ்லீம்கள் உள்ள பகுதிகளில் மதுபான தடையை விரிவுபடுத்தும் ஆய்வுக்கு பேரா அரசு ஒப்புதல்

கோலாலம்பூர், ஜன 28 –  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மதுபான தடையை விரிவுபடுத்தும் உத்தேச ஆலோசனைக்கான ஆய்வை மேற்கொள்வதற்கு ஈப்போ மாநகர் மன்றத்திற்கு பேரா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே இந்த தடை Manjoi வட்டாரத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை தற்போது ஆய்வுக் கட்டத்தில் இருப்பதாகவும், மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் செயல்முறைகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கான குழுவினால் பரிசீலிக்கப்படும் என பேரா மந்திரிபெசார் டத்தோ சராணி முகமட்
( Saarani Mohamad) தெரிவித்தார்.

“Gugusan Manjoi வட்டாரத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போலவே, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான தடையை விரிவுபடுத்துவதற்கான ஈப்போ மாநாகர் மன்றத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடையே எழும் விவாதங்கள் குறித்து மாநில அரசு கவலை கொண்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றத்திடமிருந்து மாநில அரசாங்க நிர்வாகம் கருத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் அதே வேளையில் ஈப்போ மாநாகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்டபட்ட பகுதிகளில் இந்த ஆய்வை மேற்கொள்வதில் மாநில அரசாங்கத்திற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்றும் மந்திரிபெசார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!