
ஷா அலாம், ஜன 31 – ஷா அலாம் , ஐ-சிட்டியில் உள்ள ஸ்கை சிட்டி நீர்ப் பூங்காவில் , கண்ணாடி நீர் சரிவில் இருந்து மிதவை ஒன்று பார்வையாளர் மீது விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் ( Iqbal Ibrahim ) தெரிவித்தார். 20 வயது பெண் ஒருவர் புதன்கிழமை இரவு 11 மணியளவில் தனது குடும்பத்தினரும் அந்த நீர் பூங்காவிற்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கண்ணாடி நீர் சரிவுக்கு அடியில் நடந்து கொண்டிருந்தபோது, மிதவை திடீரென விழுந்து அவரது உடலை தாக்கியது. எனினும் அவருக்கு கடுமையான காயம் ஏற்படவில்லை.
ஷா ஆலம் மாநாகர் மன்றத்தின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி
நீர்ப்பூங்கா கட்டுவதற்காக ஐ-சிட்டிக்கு ஒரு வளாகம் வழங்கப்பட்டதாக முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக 1995ஆம் ஆண்டின் சிலாங்கூர் பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சட்டத்தின் 6ஆவது விதியின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் நிருபிக்கப்பட்டால் அதிகபட்சம் 25,000 ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இக்பால் கூறினார்.