![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/6e083260-41c1-4a72-a4d3-3f37eb21bfba.jpg)
மலாக்கா, பிப்ரவரி-3 – மலாக்கா, புக்கிட் ரம்பாய் தொழிற்பேட்டையில் மின்சார வாகனங்கள் மற்றும் கைப்பேசிகளுக்கான பேட்டரிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை, நேற்று மதியம் ஏற்பட்ட தீயில் அழிந்தது.
தகவல் கிடைத்து தங்கா பத்து தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு சம்பவ இடம் விரைந்தது.
சுமார் 30 வீரர்கள் தீயணைப்பில் ஈடுபட்டதாக மலாக்கா தீயணைப்பு – மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு கமாண்டர் Noor Hafizah Mohammedol கூறினார்.
100 x 60 சதுர அடி பரப்பளவு கொண்ட அத்தொழிற்சாலை 90 விழுக்காடு தீயில் அழிந்துபோனதாகவும், இந்த அறிக்கை வெளியாகும் வரையில் தீயை அணைக்கப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாரும் காயமடைந்ததாகவோ அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவலேதுமில்லை.
தொற்சாலையில் பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டு, தீப்பிழம்பு ஏற்பட்டதை கண்டு தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறினார்.