
கோலாலம்பூர் , பிப் 5 – இம்மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சுற்றுப்பயணிகள் என சுமார் 1.8 மில்லியன் பேர் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்தகவலை இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ R . நடராஜா தெரிவித்தார்.
அடுத்த வாரம் அனுசரிக்கப்படும் தைப்பூச கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ Amirudin Shari , ம.இ.கா வின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் , ம.இ.கா வின் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ளும்படி மாட்சிமை தங்கிய பேரரசருக்கு தேவஸ்தானம் அழைப்பு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் எனினும் பேரரசர் கலந்துகொள்ள இயலாது என இஸ்தான நெகாரா கடிதம் மூலம் தெரிவித்திருக்கும் தகவலையும் நடராஜா வெளியிட்டார்.
இதனிடையே தைப்பூசத்திற்காக தேவஸ்தானம் செய்துவரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நடராஜா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
வெள்ளி ரத ஊர்வலம் கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இவ்வாண்டும் செல்லும். வெள்ளி ரத ஊர்வலத்தின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தைப்பூசத்தின் போது அதிகமான போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். எனவே தைப்பூச திருவிழாவுக்கு வருபவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்கும்படியும் நடராஜா கேட்டுக்கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புகழ்ப் பெற்ற சினிமா பின்னனி பாடகர Sid SriRam உட்பட பல்வேறு கலைஞர்களுடைய படைப்புகள் இடம்பெறவிருக்கின்றன.
இதனிடயே தைப்பூசத்தின்போது சுமார் ஒரு லட்சம் பேருக்கு வாழை இலை அன்னதானம் வழங்கப்படுகிறப்பதயும் நடராஜா தெரிவித்தர்.
மேலும் KTM இலவச ரயில் சேவை வழங்க உல்லதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டர்.
இந்த வேளையில் KTM நிறுவனத்திற்கும் டான்ஸ்ரீ நடராஜா தேவஸ்தானத்தின் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.