Latestமலேசியா

ஜோகூர் தாமான் ஸ்ரீ ஸ்கூடாயில் மூதாட்டி இறந்துகிடந்த சம்பவம்; வாரிசுகள் 2 பேர் கைது

ஜோகூர் பாரு, பிப்ரவரி-7 -ஜோகூர், ஸ்கூடாய், தாமான் ஸ்ரீ ஸ்கூடாயில் உள்ள ஒரு வீட்டில் 79 வயது மூதாட்டி இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில், ஓர் ஆடவரும் பெண்ணும் கைதாகியுள்ளனர்.

மூதாட்டியின் மரணத்தில் குற்ற அம்சங்கள் இருப்பதாக போலீஸுக்கு சந்தேகம் வந்ததை அடுத்து, அவ்விருவரும் கைதாகினர்.

மூதாட்டியின் வாரிசுகள் என நம்பப்படும் அந்த 51 வயது ஆடவரும் 58 வயது மாதுவும் போலீஸிடம் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.

இந்நிலையில் மரணமடைந்தவருக்குச் சொந்தமான சில பொருட்களும் காணாமல் போயிருக்கின்றன; அவற்றை சந்தேக நபர்களே எடுத்திருக்கக் கூடுமென, வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் Balveer Singh Mahindar Singh கூறினார்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 கைப்பேசிகள், உடைகள், ஒரு தலகாணி, நகை அடகு வைக்கப்பட்ட 2 இரசீதுகள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை விசாரணைக்காக இருவரும் 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக புதன்கிழமை இரவு 7 மணி வாக்கில் வீட்டின் வரவேற்பறையில் பாத்திக் துணியால் போர்த்தப்பட்டு அம்மூதாட்டி தரையில் கிடந்ததை, அக்கம்பக்கத்தார் கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!