![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/Banned_3_books-780x470.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – 1984 அச்சு இயந்திரங்கள் மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் 3 புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சான KDN தடை விதித்துள்ளது.
நன்னெறி ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கூறுகளை அப்புத்தகங்கள் கொண்டிருப்பதாக, KDN இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
Scott Stuart எழுதிய My Shadow Is Purple, Amir Hamzah Akal Ali எழுதிய Koleksi Puisi Masturbasi மற்றும் Erik J Brown எழுதிய All That’s Left In The World ஆகியவையே அம்மூன்று புத்தகங்களாகும்.
தடையை மீறி அப்புத்தகங்களை அச்சிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் அல்லது வெளியிடுதல் சட்டப்படி குற்றமாகும்.
அவ்வாறு செய்ததாகக் கண்டறியப்படுவோர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும்.
உள்ளூர் சமூக கலாச்சார அமைப்புக்கு முரணான கூறுகள் அல்லது இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்கு இது போன்ற ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
பன்முக மலேசியக் கலாச்சாரத்துடன் முரண்படும் சித்தாந்தங்கள் அல்லது இயக்கங்கள் பரவுவதைத் தடுக்க இது முக்கியம் என KDN மேலும் கூறியது.