
கோலாலம்பூர், பிப் 13 – பெரோடுவா தேசிய அமெச்சூர் கோல்ப் (Amateur Golf ) தொடர் 2025 போட்டியை Saujana Golf & Country Club பில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ ( Hannah Yeoh) இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அமெச்சூர் கோல்ப் (Amateur Golf ) வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் அனைத்துலக நிலையில் போட்டியிடவும் முதன்மை தளமாக 5ஆவது முறையாக நடைபெறும் இப்போட்டி விளங்குகிறது என அவர் தெரிவித்தார்.
நமது அமெச்சூர் கோல்ப் (Amateur Golf ) வீரர்கள் அனுபவத்தைப் பெறுவதற்கும், அவர்களின் திறமைகளைக் மேம்படுத்துவதற்கும் , இறுதியில் அனைத்துலக நிலையில் போட்டியிடுவதற்கும் இந்த முக்கியமான போட்டியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டை ஹன்னா இயோ தெரிவித்துக் கொண்டார்.
அனைத்து 14 மாநிலங்களையும் கூட்டரசு பிரதேசத்தையும் உட்படுத்திய இந்த தேசிய கோல்ப் போட்டியின் தொடக்கச் சுற்று Kota Permai Golf & Country Clubபில் நடைபெறும்.
உலக அரங்கில் மலேசியாவைப் பிரதிநிதிப்பதற்கும் வளர்ந்து வரும் திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தயார்படுத்துவதற்கும் இந்தத் போட்டி சிறந்த தளமாக அமைகிறது.
அதே வேளையில் Peroduaவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு போட்டியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஒத்துழைப்பு மலேசியாவின் விளையாட்டு சமூகத்திற்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றும் என நம்புவதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.