
கோலாலம்பூர், பிப் 13 – அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் அல்லாத தலைவர்கள் இஸ்லாத்தின் நிலைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர் என்று அம்னோ தலைமை செயலாளர் Asyraf Wajdi Dusuki கூறியுள்ளார்.
இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்பு சலுகைகள் மற்றும் இதர அம்சங்களில் அரசியலமைப்பின் விதிகளை மீறக்கூடாது என்பதில் முஸ்லீம் அல்லாத தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே முஸ்லீம் அல்லாத விவகாரங்களை கவனிப்பதற்கு அது தொடர்பான அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்னோ எதிர்ப்பதாக Asyraf தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாத அனைத்து அரசாங்கத் தலைவர்களும் இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்த அரசியலமைப்பின் விதிகளை மீறக்கூடாது என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
DAP , PKR, Upko , மற்றும் Gabungan Rakyat Sabah , கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அல்லது Gabungan Parti Sarawak கட்சிகள் ,அவர்களது முஸ்லிம் அல்லாத தலைவர்கள் மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புச் சலுகைகள் குறித்த அரசியலமைப்பின் விதிகளை ஒருபோதும் மீற மாட்டோம் என்று ஏற்கனவே உடன்பாட்டில் கையெழுத்திட்டிருப்பதையும் Asyraf சுட்டிக்காட்டினார்.
முஸ்லீம் அல்லாத சமய விவகாரங்கள் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சரின் கீழ் ஏற்கனவே இருந்துவருவதால் முஸ்லீம் அல்லாத சமய விவகாரங்களை கண்காணிப்பதற்கு ஒரு அமைச்சர் பதவியை உருவாக்குவது தேவையற்ற ஒன்றாகும் என தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தைத் தவிர்த்து இதர சமயங்களை நிர்வகிப்பதற்கான குறிப்பிட்ட நடைமுறைகளை கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் வழங்கவில்லை . அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே முஸ்லீம் அல்லாத சமய விவகாரங்கள் மீதான அமைச்சர் பதவியை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறிக்கொண்டார்.