
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளுக்கு அரசாங்கம் 2 நாட்கள் தேசியப் பொது விடுமுறை வழங்க வேண்டுமென, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
நடப்பில் வழங்கப்படும் ஒரு நாள் பொது விடுமுறை, சொந்த ஊர்களுக்குத் திரும்பி பெருநாளைக் கொண்டாட பெரும்பாலான மலேசியர்களுக்கு போதுமானதாக இல்லையென, ஜெம்போல் எம்.பி Shamshul Kahar Deli கூறினார்.
நேற்று மக்களவையில் பேசிய போது அவர் அப்பரிந்துரையை முன்வைத்தார்.
தற்போது கெடா, கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஹஜ் பெருநாளுக்கு 2 நாட்கள் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.