
கோலாலம்பூர், செப்டம்பர் 27 – நவராத்திரி விழா அம்பிகையைக் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
துர்கா, சரஸ்வதி, லட்சுமி என துர்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி வழிபடும் காலமான நவராத்திரி, நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் தீமைகள் அனைத்தும் அகற்றக் கூடியதாகும்.
அதனை முன்னிட்டு, இச்சிறப்புக்குரிய விழா மிக விமரிசையாக மலேசிய திருநாட்டின் தாய் கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி பத்துமலைத்திருத்தலத்திலும் நடைபெறவிருக்கிறது.
எதிர்வரும் அக்டோபர் 3ஆம் திகதி தொடங்கவுள்ள கொண்டாட்டத்தைக் குறித்து இவ்வாறு விளக்கமளிக்கிறார் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா.
Interview
ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ ராஜமாதங்கி என 9 ரூபங்களாய் அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்க உள்ளார்.
இன்னிசை நிகழச்சிகளுடன் நடைபெறவுள்ள, இந்நவராத்திரி விழாவில் பக்தர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து, அம்மனைத் தரிசித்து வேண்டிய நல்வரங்களைப் பெற்றுச் செல்லுமாறு ஆலயத் தரப்பில் டான் ஸ்ரீ ஆர் நடராஜா கேட்டுக் கொண்டார்.