
கோலாலம்பூர், பிப் 21 – அண்மையில் இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இனத்துவேசமான வார்த்தையை அட்டையில் எழுதி வைத்திருந்த சோள வியாபாரி ஒருவர் Sepang கிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 64 வயதுடைய அந்த வர்த்தகருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக Sepang மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Shan Gopal Krishnan தெரிவித்தார்.
அவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(b) யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதோடு அதே சட்டத்தின் பிரிவு 268 இன் கீழ் மாற்றுக் குற்றச்சாட்டும் கொண்டுவரப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 505(b) பிரிவு, எந்தவொரு அறிக்கையையும், வதந்தியையும் அல்லது பரப்புவது குற்றமாகும்.
மேலும் அந்த வர்த்தகரின் 52 வயது மனைவியான இந்தோனேசியர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவரது மனைவி மலேசியாவில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக குடிநுழைவுத் சட்டத்தின் 1959/63 பிரிவின் 6(1)(c) யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.