Latestஉலகம்

மகா கும்பமேளாவில் 60 கோடி பேர் குவிந்தும் மாசடையவில்லை; கங்கை நதியின் தனித்துவ சுய சுத்திகரிப்பு

பிரயாக்ராஜ், பிப்ரவரி-23 – மகா கும்பமேளாவில் 60 கோடிக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு எண்ணற்ற புனித நீராடுதல்கள் நடைபெற்ற போதிலும், கங்கை நதி முற்றிலும் கிருமிகள் அற்றதாகவே உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஒரே நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான பாக்டீரியாக்கள் இயற்கையாகவே மாசுபாட்டை நீக்கி, 50 மடங்கு வேகமாகக் கிருமிகளைக் கொன்று, தண்ணீரை சுத்திகரிப்பதாக, முன்னணி விஞ்ஞானி Dr Ajay Sonkar நடத்திய ஆய்வு கூறுகிறது.

கங்கையின் ஆற்றலை அவர் கடல்நீருடன் ஒப்பிடுகிறார்; அதாவது, கங்கையில் உள்ள பாக்டீரியாக்கள் மாசுபாட்டையும், தீங்கு விளைவிக்கும் மற்ற கிருமிகளையும் அழித்து விட்டு பின்னர் மறைந்து விடுகின்றன.

இந்த பாக்டீரியாக்கள் நதியை உடனடியாக சுத்தப்படுத்துவதால் கங்கையின் ‘பாதுகாப்புக் காவலர்’ என்றும் அவை அழைக்கப்படுகின்றன.

கங்கையின் தனித்துவமான இந்த சுய சுத்திகரிப்பை, இயற்கை நமக்களிக்கும் செய்தியாகப் பார்க்கிறார் Dr Ajay Sonkar.

நதி அதன் இருப்பைப் பாதுகாப்பது போல, மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும், இல்லாவிட்டால் இயற்கை அதன் வேலையைக் காட்டி விடும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!