Latestமலேசியா

லைசென்ஸ் இல்லாத 7 வர்த்தகளின் பொருட்கள் பறிமுதல் – கோலாலம்பூர் மாநாகர் மன்றம்

கோலாலம்பூர், பிப் 24 – கோலாலம்பூர் பசார் பூரோங் ( Pasar Borong) சுற்றிலும் லைசென்ஸ் (licences) இன்றி வர்த்தம் செய்த ஏழு வர்த்தகர்களின் பொருட்களை கோலாலம்பூர் மாநாகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அங்காடி வியாபாரிகளுக்கான துணை சட்ட விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கோலாலம்பூர் தாமான் மிஹார்ஜாவிலுள்ள (Taman Miharja) மாநகர் மன்ற கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டு ஆவண பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதாக மாநகர் மன்றத்தின் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

லைசென்ஸ் இல்லாமல் வர்த்தகம் நடைபெறும் இடங்களில் அவ்வப்போது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் மாநாகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!