Latestமலேசியா

போர்டிக்சன் கடலில் முதலை; பீதியான சுற்றுப் பயணிகள்

போர்டிக்சன், பிப்ரவரி-24 – நெகிரி செம்பிலான், போர்டிக்சன் கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பிலிப்பின்ஸ் சுற்றுப் பயணிகள், கடலில் முதலை நீந்துவதை கண்டு பீதியடைந்தனர்.

2 வீடியோக்களில் அது பதிவாகி வைரலும் ஆகியுள்ளது.

முதலையைக் கண்டதும், கடலில் நீந்தும் முடிவையே அவர்கள் கைவிட்டனர்; அதற்கு பதிலாக பாதுகாப்பான தூரத்தில் படகுப் பயணத்தின் மூலமாக கடல் அழகை இரசிக்க அவர்கள் முடிவுச் செய்தனர்.

ஆனால் அவர்களின் துரதிஷ்டம், அதே முதலை அவர்கள் பயணம் செய்த படகின் அருகில் வந்து நீந்திக் கொண்டிருந்தது.

இதனால் சுற்றுப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்; எனினும், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

வீடியோவைப் பார்த்த உள்ளூர் வெளியூர் வலைத்தளவாசிகள், பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில சிரிப்பை வரவழைக்கும் வகையிலும் இருந்தன; குறிப்பாக, அண்மையில் கோலாலாம்பூர் Mid Valley பேரங்காடிக்கு அருகேயுள்ள ஆற்றில் காணப்பட்ட முதலைதான் PD வரை வந்திருப்பதாக ஒருவர் கூறினார்.

அதே சமயம், பொது மக்கள் மற்றும் சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, முதலையைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் பலர் வலியுறுத்தினர்.

உப்பு நீர் முதலைகள், ஆறுகள் மற்றும் திறந்த கடல்களுக்கு இடையில் அவ்வப்போது அலைந்து திரிவது வழக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!