Latest

தென் கொரியாவில் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம் இடிந்தது; நால்வர் மரணம், அறுவர் காயம்

சோல், பிப் 25 – தென் கொரிய தலைநகர் சோலின் (Seoul) தென் பகுதியில் நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம் இடிந்ததில் குறைந்தது நால்வர் மரணம் அடைந்ததோடு மேலும் அறுவர் காயம் அடைந்தனர்.

Seoul நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Anseongகில் இன்று காலை மணி 9.49 அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது.

நெடுஞ்சாலை பாலத்தை தாங்கிய ஐந்து 50 மீட்டர் கான்கிரீட் கட்டமைப்புகள் கிரேன் மூலம் உயர்த்தப்பட்ட பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்தன என்று Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு சீன பிரஜைகள் உட்பட நான்கு பேர் இறந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர், இதில் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அந்த ஐவரில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவார் என Anseong தீயணைப்பு அதிகாரி Ko Kyung Man தெரிவித்தார்.

அவர்கள் பாலத்தில் ஒரு தளத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 10 பேரும் பாலத்தின் மேல் இருந்தபோது அது சரிந்ததில் அவர்கள் இருபுறமும் விழுந்தனர். உயரமான பாலத்தின் தளம் இடிந்து விழுவதைக் காட்டும் வியக்கத்தக் காட்சிகளை YTN நிலையம் ஒளிபரப்பியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!