
லண்டன், பிப்ரவரி-26 – லண்டனில் ஒரு பண்ணை வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்கக் கழிவறையைத் வெறும் ஐந்தே நிமிடங்களில் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
‘அமெரிக்கா’ என பெயரிடப்பட்ட அக்கழிவறையின் மதிப்பு மலேசிய ரிங்கிட்டுக்கு 15.6 மில்லியன் ஆகும்.
18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட அக்கழிவறை, Oxford அருகேயுள்ள Blenheim அரண்மனையிலிருந்து 2019-ஆம் ஆண்டு திருடுபோனது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட CCTV காட்சிகளின் தான், அந்த 5 நிமிட துணிகர திருட்டு அம்பலமானது.
சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அரண்மனைக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள், தங்கக் கழிவறையை உருட்டிக் கொண்டு வெளியே வருவது கேமரா பதிவில் தெரிகிறது.
அவர்களில் ஒருவன் கழிவறையின் இருக்கையைத் தூக்கிச் செல்கிறான்.
அனைத்தையும் காரில் போட்டுக்கொண்டு அக்கும்பல் தப்பியோடியது.
எனினும் பின்னர் பிடிபட்ட அம்மூவரும் நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.