
லங்காவி, மார்ச்-2 – கெடா, லங்காவியில் நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறியதில் 4 வயது சிறுவன் படுகாயமுற்றான்.
நேற்று காலை 10.30 மணியளவில் Kampung Dedek Sungai Menghulu-வில் வீட்டுக்கு வெளியே அவன் விளையாடிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
மகனை நாய்கள் கடித்த போது தாய் வீட்டில் இல்லை.
இந்நிலையில் நாய்கள் தாக்குவதைப் பார்த்த பொது மக்கள் அவனைக் காப்பாற்ற, பின்னர் அம்புலன்ஸ் வாயிலாக அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
தலையில் காயம் சற்று மோசமாக இருப்பதாகக் கூறிய சிறுவனின் தாயார், உடம்பிலும் கால்களிலும் நாய் கடி காயங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்.
அச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.