
சுங்கை பட்டாணி, மார்ச்-2 – பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, கெடா, குவாலா மூடா தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு பண்டார் புத்ரி ஜெயாவில் 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மா.வெற்றிவேலன் அதனைத் தெரிவித்தார்.
நில மேம்பாட்டு நிறுவனமான OSK Developer-ரின் அளவற்ற உதவி மற்றும் தன்னலமற்ற பங்களிப்பு இதை சாத்தியமாக்கியது.
OSK நிறுவனத்தின் சார்பில் Paul நேற்று கலந்துகொண்ட சந்திப்பில் இந்த நில ஒதுக்கீடு இறுதிச் செய்யப்பட்டது.
அச்சந்திப்பில் தியாகராஜ் சங்கரநாராயணன், ஜான்சன் விக்டர், பள்ளித் தலைமையாசிரியர்
சூரியன், மேலாளர் வாரியத்தின் மாசிலாமணி, நாராயணன், குணசேகரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை நமது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் விடியலை குறிக்கிறது.
பள்ளியின் இந்த இடமாற்றம் வெறும் முகவரி மாற்றமல்ல, மாறாக நம்பிக்கையின் சின்னமாகவும், முன்னேற்றத்தின் சின்னமாகவும், நமது கனவுகளை உணர்த்தும் சின்னமாகவும் உள்ளதாக வெற்றிவேலன் கூறினார்.
நமது குழந்தைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் இந்த புதிய பயணத்தை தொடங்குவதற்காக அனைவரும் ஆவலாக காத்திருக்கிறோம் என்றார் அவர்.