Latestமலேசியா

இஸ்மாயில் சாப்ரி மீதான MACC விசாரணையில் RM170 மில்லியன் சீல், 16 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

புத்ராஜெயா, மார்ச்-3 -முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பை உட்படுத்திய ஊழல் மற்றும் பணச்சலவை விசாரணையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, பல்வேறு நாடுகளின் நாணயங்களில் 170 மில்லியன் ரிங்கிட்டை சீல் வைத்துள்ளது.

Baht, Riyal, Pound Sterling, Won, Euro, Swiss Franc, Yuan ஆகியவையே அந்த வெளிநாட்டு நாணயங்களாகும்.

அதே சமயம், சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 சொக்கத் தங்கக் கட்டிகளையும் அது பறிமுதல் செய்துள்ளது.

கடந்த வாரம் இஸ்மாயில் சாப்ரியின் 4 முன்னாள் அதிகாரிகள் கைதான பிறகு, அவர்களின் வீடுகள் மற்றும் safehouse எனப்படும் பாதுகாப்பான 3 இடங்களில்  மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவை கைப்பற்றப்பட்டன.

அவர் 9-ஆவது பிரதமராக இருந்த போது விளம்பர நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியை தங்களின் விசாரணைக் குறி வைத்திருப்பதாக, MACC வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வேளையில், டிசம்பரில் MACC உத்தரவிட்டபடி  பிப்ரவரி 10-ஆம் தேதி இஸ்மாயில் சாப்ரி தனது சொத்து விவரங்களை அறிவித்தார்.

அதோடு, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று MACC அலுவலகத்திற்கு வந்து அவர் வாக்குமூலமும் அளித்தார்.

என்றாலும் விசாரணைக்கு அவர் மீண்டும் அழைக்கப்படும் சாத்தியத்தை MACC மறுக்கவில்லை.

விசாரணைக்கு உதவ விரைவிலேயே 10 சாட்சிகளும் அழைக்கப்படலாம்.

விசாரணை சுதந்திரமாகவும்  சட்டத்திற்குட்பட்டும் நடைபெறுவதாகவும் MACC உத்தரவாதம் அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!