Latestமலேசியா

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடு தொகையில் 10% ஒதுக்கீடு பூமிபுத்ரா அல்லாத சமூகத்திற்கும் ஒதுக்குவீர் – லிம்

கோலாலம்பூர், மார்ச் 3 – அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டில் இருந்து 10 விழுக்காடு தொகை பூமிபுத்ரா அல்லாத சமூகங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென DAP யின் தலைவர் லிம் குவான் எங் (Lim Guan Eng) ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கீடு தொகை எவ்வளவாக இருந்தாலும் தாம் அதனை ஆதரிப்பதாகவும் அதே வேளையில் பூமிபுத்ரா அல்லாத சமூகத்திற்கான ஒதுக்கீடுகளும் சரியான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும் என Bagan பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு பூமிபுத்ராக்களுக்கு 12 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டால் அதில் 10 விழுக்காடன 1.2 பில்லியன் ரிங்கிட் பூமிபுத்ரா அல்லாத சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டுமென அவர் கூறினார்.

அனைத்து பிரஜைகளின் நலன்களையும் கவனித்துக்கொள்ளும் ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது இருக்க வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் துணை விநியோக மசோத மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது லிம் இதனை தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு 11.4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அதே வேளையில் பூர்வகுடி சமூகங்களுக்கு 274 million ரிங்கிட்டும் , சீன மற்றும் இந்திய சமூகத்திற்கு 345 million ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!