
உலு சிலாங்கூர், மார்ச்-4 – குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியின் அண்மைய ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு குறித்து, போலீஸார் விசாரணை அறிக்கைத் திறந்துள்ளனர்.
அக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்ணொருவர் அது குறித்து புகார் செய்ததாக, குவாலா சிலாங்கூர் போலீஸ் தலைவர் சூப்ரிடன்டண்ட் Azaharudin Tajudin கூறினார்.
கூட்டத்தில் ஓர் ஆடவர் தன்னை நோக்கி ‘ பாராங்கத்தியை எடுக்கவா?” என மிரட்டியதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.
அதோடு தன்னை நெருங்கி சினமூட்டும் வகையில் அவர் நடந்துகொண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, Azaharudin சொன்னார்.
குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் ஆண்டுக் கூட்டத்தில் நிகழ்ந்த சண்டை குறித்த வீடியோ முன்னதாக டெலிகிராமில் வைரலானது.
அமைச்சர் ஒருவரின் சிறப்பு அதிகாரியும் கட்சித் தேர்தலில் போட்டியும் வேட்பாளருமான ஓர் ஆடவர், தனது போட்டியாளரை விரட்டுவதற்காக குண்டர்களை களமிறக்கியதால் அச்சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது.